இரத்தம் சித்தியவர்கள் நினைவாக இரத்த தானம் - Yarl Thinakkural

இரத்தம் சித்தியவர்கள் நினைவாக இரத்த தானம்எங்களுக்காக இரத்தம் சித்தியவர்களுக்காக என்ற தொனிப்பொருளில் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
இன்று முற்பகல் 10மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை இரத்ததான நிகழ்வு இடம்பெறுகின்றது. யாழ்;.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் நிகழ்விடத்தில் நடமாடும் இரத்த வங்கியூடாக இரத்தம் சேகரித்தனர்.
Previous Post Next Post