பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் தேர்வு - Yarl Thinakkural

பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் தேர்வு


ஆர்மோனியாவின் பிரதமராக இருந்த சர்கிசியான் மக்கள் எதிர்ப்பு காரணமாக இராஜிநாமா செய்த நிலையில், புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான் இன்று பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார்.
செர்ஸ் சர்கிசியானின் அதிகாரத்தை வலுப்படுத்தவே ஆளும்கட்சியினர் அவரை பிரதமராக தேர்வு செய்ததாக எதிர்க்கட்சிகள் கருதின.
பிரதமர் பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட செர்ஸ் சர்கிசியான், பாராளுமன்ற ஆட்சிமுறையை ஆர்மோனியாவில் கொண்டு வர முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
பிரதமர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் என எதிர்க்கட்சியினருடன் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்தார்.
இதையடுத்து எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

Previous Post Next Post