அக்னி கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - Yarl Thinakkural

அக்னி கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்த தமிழர்கள் நினைவாக இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இறுதிக்கட்டப்போரில் பலியான தமிழர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவு தினம் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நேற்றுமுன்தினம் மாலை ஒன்றுகூடிய தமிழ் அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளில் தீபம் ஏற்றி போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் தொலைபேசிகளிலுள்ள விளக்குகளை எரிய விட்டு முழக்கமிட்டனர்.

Previous Post Next Post