கடற்றொழிலுக்கு சென்றவர் திடீர் மரணம் - Yarl Thinakkural

கடற்றொழிலுக்கு சென்றவர் திடீர் மரணம்


வடமராட்சி-பொலிகண்டிப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் கடலில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து மரணமடைந்தார்.
அவருடன் கூடச் சென்றவர்கள் சடலத்துடன் நேற்றுக் காலை கரை சேர்ந்தனர்.
போலிகண்டியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை செல்வநாயகம்  (வயது -64) என்பவரே மணரமடைந்தவராவார். நேற்று திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இவர் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். கடலில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருடன் கூடச் சென்றோர் அவசரமாக அவரை கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் அவர் மரணமடைந்தார்.
பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா  வின்சன் தயான் மரண விசாரணையினை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் நேற்று  சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Previous Post Next Post