பிரபாகரனின் இடத்தை கஜேந்திரகுமாருக்கு வழங்க வேண்டும்; அகில இலங்கை தமிழ் காங்கிஸின் கோரிக்கை இது! - Yarl Thinakkural

பிரபாகரனின் இடத்தை கஜேந்திரகுமாருக்கு வழங்க வேண்டும்; அகில இலங்கை தமிழ் காங்கிஸின் கோரிக்கை இது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதால், அவரின் இடத்தை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆணந்தராசா கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் வழியில் தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கி பயணிக்க தமிழ் மக்கள் அணிதிரழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது இறந்துவிட்டார் என்று அரசாங்கம் விடுத்த அறிவித்ததை அடுத்து, இறுதி யுத்தத்தின் முடிவில் மீட்கப்பட்ட உடல் பிரபாகரனின் உடல் இல்லை என்றும், அவரின் மரண சான்றிதழ் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் சர்சைகள் இன்றுரை நிலவி வருகின்றது.

இந்நிலையில் அகில இலங்கை தமிழ் காங்ரஸ் கட்சியின் தலைவர் வெளிப்படையாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று மே தின உரையில் தெரிவித்ததை அடுது;து அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ப்தி வெளியிடப்பட்டதுடன், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் அவருடைய கருத்து தொடர்பில் தமக்கிடையில் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிகழ்வில் மேலும் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டதைப்பின. மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

அதாவது கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கற்றாக இருக்கின்ற நிலையில் அவர்களால் எப்படி தீர்வைக் கொண்டு வர முடியும். ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம. வழியில் தீர்வை நோக்கி பயணித்து தீர்வை காண வேண்டும் என்றார்.
Previous Post Next Post