பாரிஸில் பயங்கரம்: இருவர் பலி - Yarl Thinakkural

பாரிஸில் பயங்கரம்: இருவர் பலி


பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் மத்திய பகுதியில் நடந்த  கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் பலியானதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாரிஸின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ். இந்த கட்டடத்தின் அருகே மர்ம நபர் கண்ணில் தென்படும் நபர்களை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான். இதில் ஒருவர் பலியானார். ஒபேரா பகுதியில் தாக்குதல்காரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோசமிட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் படைவீரர் ஒருவர் தான் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐ.எஸ். தெரிவித்துள்ளது.

Previous Post Next Post