யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி நிதியை முதல்வர் பயன்படுத்தலாம் - Yarl Thinakkural

யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி நிதியை முதல்வர் பயன்படுத்தலாம்


யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவசர தேவைகளுக்கு 5இலட்சம் வரையான பணத்தை சபை அனுமதியின்றி பயன்படுத்த முடியும் என சபையில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆணையாளரும் ஒரு இலட்சத்தி 25 ஆயிரும் ரூபா வரை அவசர தேவைகளுக்காக பயன்படுத்தவும் பை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் நிதி கையாளுகை தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன்போது முதலில் கருத்து வெளியிட்ட உறுப்பினர் மணிவண்ணன் முதல்வர் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரையும், ஆணையாளர் ஒரு இலட்சத்து  50 ஆயிரம் ரூபா வரையும் அவசர தேவைகளுக்காக மாதம் ஒரு முறை பயன்படுத்த முடியும் என்றார். அவருடைய கருததை  பல உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டபோதும் சிலர் அவசர தேவைக்கான செலவீனம் மக்களுக்கானது அதை உயர்த்த வேண்டும் என்று கோரினர்.
இதன்படி முதல்வர் அவசர தேவைகளுக்காக 5 இலட்சம் ரூபாவையும் ஆணையாளர் ஒரு இலட்சத்தி 25 ஆயிரம் ரூபாவையும் நிதிக் குழுவின் அனுமதி இன்றி செலவு செய்ய முடியும். அதற்கு கூடிய தொகையினை செலவு செய்வதாக இருந்தாலும், ஏனைய தேவைகளுக்கான செலவுகளையும் நீதிக் குழுவின் அங்கிகாரத்தோடு, சபை அனுமதி பெற்றே செலவு செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

Previous Post Next Post