அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா முடிவு - Yarl Thinakkural

அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா முடிவு


அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு தங்கள் நாட்டிலுள்ள அணு குண்டு பரிசோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா தீர்மானித்துள்ளது. இதனை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

ஹிம்-ட்ரம்ப் ஆகியோர் ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கி கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள இரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post Next Post