பெண்ணின் உயிரை பறித்த ஹெட்போன் - Yarl Thinakkural

பெண்ணின் உயிரை பறித்த ஹெட்போன்


சென்னையில் கையடக்க தொலைபேசி ஊடாக ஹெட்போனில் பாட்டு கேட்டுவாறு தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் கணத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (வயது-45). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும் போது தொலைபேசியில் ஹெட்போனை போட்டு பாட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஹெட்போனை காதிலிருந்து அகற்றாமல் தூங்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை பாத்திமாவின் கணவர் அப்துல் கலாம் அவரை எழுப்பியுள்ளார். ஆனால் பாத்திமா விழிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்துல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பாத்திமாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் பாத்திமாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாத்திமா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இரவில் தூங்கும் போது ஹெட்போனில் பாட்டு கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post