புகைப்பிடித்தவர் உடல் கருகி பலி - Yarl Thinakkural

புகைப்பிடித்தவர் உடல் கருகி பலி

அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38வயதான நபர் இ-சிகரெட் வெடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
புளோரிடா செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்த டால்மேட்ச் எலியா (வயது-38) இவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது.
நேற்று இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80சதவீதம் கருகிய நிலையில் இருந்தது.
படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனையில் இ-சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Previous Post Next Post