தாஜ்மஹால் நிறம் மாறியது ஏன்? - Yarl Thinakkural

தாஜ்மஹால் நிறம் மாறியது ஏன்?தாஜ்மஹாலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தொல்பொருள்துறை தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சரியான பாராமரிப்பு இல்லாததால் தாஜ்மஹாலின் நிறம் மாறி வருகிறது. பூச்சிகள் தொல்லையால் பாதிப்புள்ளது. எனவே தாஜ்மஹாலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சூழலியலாளர் எம்.சி.மேத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தாஜ்மஹாலை பாதுகாக்க சர்வதேச நிபுணர்களை நியமிப்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

யமுனை நதியில் நீர் தேங்குவதால் பூச்சிகள் தொல்லை இருப்பதாக தொல்பொருள் துறை வழக்கறிஞர் கூறினார். அப்போது, தொல்பொருள் துறை தனது வேலையை செய்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. தாஜ்மஹாலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தொல்பொருள் துறை தவறிவிட்டது. தொல்பொருள் துறை தேவையா, இல்லையா என்று மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Previous Post Next Post