பத்து வருடங்களின் பின்னர் லெபனானில் பாராளுமன்ற தேர்தல் - Yarl Thinakkural

பத்து வருடங்களின் பின்னர் லெபனானில் பாராளுமன்ற தேர்தல்


கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இஸ்ரேல், சிரியாவை அயல் நாடாக கொண்ட லெபானானில் கடைசியாக 2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன் பின்னர் பிராந்திய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு நீடிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றுள்ளது.
128 இடங்களுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. பல்வேறு மாற்றங்களுடன் இம்முறை தேர்தல் நடப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post