ஹபாயவுக்கு தடை வேண்டும்: களம் இறங்குகிறார் ஞானசார் - Yarl Thinakkural

ஹபாயவுக்கு தடை வேண்டும்: களம் இறங்குகிறார் ஞானசார்

முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அபாயா ஆடை அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அப்பிரதேசத்தில் இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவஇ மாணவிகளுக்கு முஸ்லிம் முறைப்படி சீருடைகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவைகள் ஒரு இனத்தின் தேசிய கலாச்சாரத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.

நீதிமன்றங்களில் தொப்பிஇ மற்றும் முகத்தினை மூடும் ஆடைகளை அணியக் கூடாது என்ற பொதுவான சட்டம் தேசிய பொது பாதுகாப்பு நலன் கருதி காணப்படுகின்றது.

ஆனால் இவர்கள் தமது சமய கோட்பாடுகளை மதிப்பதாக கூறி தேசிய சட்டங்களை அவமதிக்கின்றனர். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

வட கிழக்கு பாடசாலைகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் என்ற முறைமை காணப்படுகின்றது.

இதற்கு எதிராக தமிழ் மக்கள் இதுவரை காலமும் எவ்வித பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவில்லை. தேசிய அரசாங்கம் இந்த சமூக பிரச்சினைக்கு விரையில் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Previous Post Next Post