தேர்தலில் 883கோடீஸ்வரர்கள், 645குற்றவாளிகள் போட்டி - Yarl Thinakkural

தேர்தலில் 883கோடீஸ்வரர்கள், 645குற்றவாளிகள் போட்டி


கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883கோடீஸ்வரர்கள், 645 குற்றவாளிகள் போட்டியிடுவதாக “தி இந்து” ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கர்நாடக சட்டப் பேரவைக்கு எதிர்வரும் 12ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 224சட்டப் பேரவைத் தொகுதிகளில் 223தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களுர் ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் இறந்து விட்டதால் அத்தொகுதியில் மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 883கோடீஸ்வரர்கள் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். கர்நாடகாவில் மொத்தம் களத்திலுள்ள வேட்பாளர்களில் 645வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதில் 254பேர் மீது மோசமான குற்றவியல் வழக்குகளும், 391பேர் மீது சாதாரண குற்றவியல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
223பா.ஜ.க. வேட்பாளர்களில் 20வேட்பாளர்கள் ஒரு கோடி ரூபாவுக்கு அதிகமான சொத்து வைத்திருப்பவர்களாக உள்ளனர். அதேபோல 220காங்கிரஸ் வேட்பாளர்களில் 207பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 199 மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களில் 154பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 1,090சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 199பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர்.

Previous Post Next Post