விபத்தில் 80வயது முதியவர் பலி - Yarl Thinakkural

விபத்தில் 80வயது முதியவர் பலி


முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுதந்திரபுரத்தை சேர்ந்த 80 வயதுடைய தோமையான் அந்தோணி என்பவரே உயிரிழந்தவராவார்.
உடையார்கட்டு பகுதியூடாக  மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை வேகமாக வந்த வாகனமொன்று  மோதித்தள்ளியது. படுகாயமடைந்த அவர் உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்ட முதியவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்தில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post