ராஜஸ்தானில் நேற்று இரவு வீசிய புழுதி புயலில் சிக்கி 72பேர் பலியானதுடன், சுமார் 100பேர் காயமடைந்தனர். பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதுகுறித்து அதிகாரிகள் குறிப்பிடுகையில்: ராஜஸ்தானில் அல்வார், தோல்பூர், பாரத்பூர் ஆகிய மாவட்டங்களை நேற்று இரவு புழுதி புயல் தாக்கியது. இதில் சிக்கி 72பேர் பலியாகினர். சுமார் நூறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புழுதி புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மட்டுமில்லாது பஞ்சாம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நேற்று கனமழை பெய்துள்ளது. கனமழையால் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பஞ்சாப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.