68வயதான சவூதி இளவரசருக்கு 25வயது பெண்ணுடன் திருமணம் - Yarl Thinakkural

68வயதான சவூதி இளவரசருக்கு 25வயது பெண்ணுடன் திருமணம்


சவூதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 330கோடி ரூபாவை வரதட்சணையாக கொடுத்து 68 வயதில் இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார். சவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மான் தனது 68 வயதில் 25வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை திருமணம் செய்ய சுல்தான் 330கோடி ரூபாவை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
திருமண நிகழ்வின் போது 30குதிரை வண்டிகளில் பரிசுப்பொருட்கள் சேர்ந்துள்ளன. மேலும் சொகுசு பேருந்து ஒன்றில் இருந்து 30பெட்டிகள் இறக்கப்பட்டன. அதிலிருந்து வைர நகைகளும், பரிசு பொருட்களும் பெண் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது. மணப்பெண் சவூதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post