இந்தியாவை தாக்கிய புழுதிப் புயல்: 60பேர் பலி - Yarl Thinakkural

இந்தியாவை தாக்கிய புழுதிப் புயல்: 60பேர் பலிஇந்திய தலைநகர் டில்லியிலும் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட புழுதிப் புயல், இடி மின்னலுடன் கூடிய மழையால் 60பேர் உயிரிழந்துள்ளனர்.
டில்லியிலும், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார், தெலுங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் டில்லியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென புழுதிப் புயல் தாக்கியது. மணிக்கு 109கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. மோசமான வானிலை காரணமாக டில்லியில் தரையிறங்க வேண்டிய 40விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 25இற்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில் சேவையிலும் தடங்கல் ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு பர்கானாக்கள் மாவட்டம், நாடியா, ஹெளரா ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 60பேர் பலியானதுடன், 100இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post