வடக்கு மாகாண சபைத் தேர்தல் நவம்பரில்? -மேலும் 6 மாகாண சபைகளுக்கும் தேர்தல்- - Yarl Thinakkural

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நவம்பரில்? -மேலும் 6 மாகாண சபைகளுக்கும் தேர்தல்-

வடக்கு மாகாண சபை தேர்தல் நவம்பரில் நடக்கும் சாத்தியமுள்ளதாக அரச தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும்இ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நிர்வாக காலம் முடிவடைந்துள்ளஇ சப்ரகமுவஇ வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும்இ இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நிர்வாக காலம் முடிவடையவுள்ளஇ மத்தியஇ வடக்கு மற்றும் வட மேற்கு ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகஇ இந்த தேர்தலை பழைய விகிதாசார முறைமையில் நடத்துவதற்கு அரசியற் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post