58கோடி பேஸ்புக் கணக்குகள் முடக்கம் - Yarl Thinakkural

58கோடி பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5கோடி பேர் குறித்த விபரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது. 
இதையடுத்து பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 3மாதங்களில் மட்டும் 58.3கோடி போலி முகநூல் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டன.
Previous Post Next Post