50ரூபாவுக்கு கஞ்சா கடத்தும் சிறுவர்கள் - Yarl Thinakkural

50ரூபாவுக்கு கஞ்சா கடத்தும் சிறுவர்கள்

சென்னையில் ஐந்து பரோட்டா, 50ரூபா பணத்துக்காக கஞ்சா  பொதிகளை சிறுவர்கள் கடத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய பொலிஸார், சென்னையை பொறுத்த வரை புழல் சிறை முதல் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் கைகளில் கஞ்சா நடமாட்டம் சர்வசாதாரணமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தென்சென்னையில் உள்ள பலர் கஞ்சா விற்பனையாளர்களாக உள்ளனர். ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் இவர்களுக்கு கஞ்சா விநியோகிக்கப்படுகின்றது.
அவற்றை சிறுவர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்கின்றனர். 12வயது முதல் 16வயதுக்குள் இருக்கும் சிறுவர்களை தேர்ந்தெடுக்கும் கஞ்சா வியாபாரிகள், அவர்கள் மூலம் கஞ்சா பொதிகளை கடத்துகின்றனர். இதற்கு ஐந்து பரோட்டா, 50ரூபா மட்டுமே சிறுவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதில் பல சிறுவர்களுக்கு தாங்கள் கொண்டு செல்லும் பொதி கஞ்சா என்று கூட தெரியாது. இதற்கென தனி வலையமைப்பு சென்னையில் செயற்படுகிறது. சமீபத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது மூன்று சிறுவர்கள் சிக்கிய பிறகு தான் எங்களுக்கே இந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட சிறுவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி விட்டோம். கஞ்சா விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.

Previous Post Next Post