யாழ் நூலக எரிப்பின் 37 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுஸ்ரிப்பு! - Yarl Thinakkural

யாழ் நூலக எரிப்பின் 37 ஆம் ஆண்டு நினைவுநாள் அனுஸ்ரிப்பு!

தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ்.பொது நூலகம் எரிப்பின் 37 ஆவது ஆண்டின் நினைவேந்தல் யூன் மாதம் முதல்லம் திகதி நடைபெறவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இவ் நினைவுநாள் நிகழ்வு யாழ் பொது நூலகம் முன்பாக 2018.06.1 திகதி மாலை 5.45 மணியளவில் நடாத்தப்படவுள்ளது.

ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் யூ.என்.பி அரசின் ஆட்ச்சி காலத்தில் யாழ். பொது நூலகம் கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அல்லது யூன் மாதம் முதலாம் திகதி எரிக்கப்பட்டது.

இதன் போது நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 97 ஆயிரம் புத்தகஙகளும், பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகளும் எரித்து நாசம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post