நீதிபதி இளஞ்சொழியனின் உத்தரவு: 275 கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு! - Yarl Thinakkural

நீதிபதி இளஞ்சொழியனின் உத்தரவு: 275 கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் 275 கிலோ கிராம் கஞ்சா உள்பட்ட சான்றுப் பொருள்கள் இன்று  வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

2016ஆண்டு நிறைவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வனபுணர்வு உள்ளிட்ட 15 வழக்குகளின் சான்றுப் பொருள்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் உத்தரவில், நீதிமன்ற வளாகத்துக்கு முனபாகவுள்ள அரச காணியில் போட்டு அவை எரிக்கப்பட்டன.

இந்த சான்றுப் பொருள்களில் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 27 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள்களும் அடங்கும்.

இதேவேளை, சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடந்த நவம்பர் 23ஆம் திகதி நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையுள்ள அரச காணியில் தீயிட்டு அழிக்கப்பட்டன. அவை  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவில் அவர் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

Previous Post Next Post