23வயது பெண்ணுடன் 13வயது சிறுவனுக்கு திருமணம் - Yarl Thinakkural

23வயது பெண்ணுடன் 13வயது சிறுவனுக்கு திருமணம்


ஆந்திர மாநிலத்தில் 13வயது சிறுவனுக்கும் 23வயது இளம் பெண்ணுக்கு நடந்த இரகசிய திருமணத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவனின் தாயார் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தான் இறந்து விட்டால் மகனை யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். உறவினர்கள் ஊடாக 13வயது சிறுவனுக்கு 23வயது பெண் தேர்ந்தெடுத்துள்ளார். தாயின் முழு சம்மதத்தோடு திருமணமும் நடந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உறவினர்கள் சிலருக்கு மட்டும் தெரிவித்து இரகசியமாக நடந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களை உறவினர்களில் யாரோ ஒருவர்
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதைப்பார்த்த பொலிஸார் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பெண் வீட்டார் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். பொலிஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில் துணை ஆட்சியாளர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post