20ஆண்டுகளின் பின் அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி - Yarl Thinakkural

20ஆண்டுகளின் பின் அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் முக்கிய உதவியாளரான ஜெனரல் கிம் ஜோங் சோல், ட்ரம்ப் மற்றும் கிம் இடையே இடம்பெறவுள்ள சந்திப்பு குறித்து விவாதிப்பதற்கு அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை அவர் சந்தித்து பேசினார். வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா சென்றுள்ளமை சுமார் 20ஆண்டுகளின் பின்னர் இதுவே முதன்முறையாகும்.
நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகம் அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற அந்த சந்திப்புக்கு பாம்பேயோ மற்றும் ஜெனரல் கிம் ஆகியோர் தனித்தனியாக சென்றனர். சந்திப்புக்கு பின் பேசிய பாம்பேயோ, அமெரிக்க மாட்டிறைச்சியுடன் அந்த இரவு விருந்து சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

Previous Post Next Post