வெயிலால் ஒரே நாளில் 19பேர் பலி - Yarl Thinakkural

வெயிலால் ஒரே நாளில் 19பேர் பலி


ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெயில் தாக்கத்தால் ஒரு நாளில் மட்டும் 19பேர் பலியாகியுள்ளனர். இவ்விரு மாநிலங்களிலும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் இவ்விரு மாநிலங்களிலும் வெயிலுக்கு 19பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக கடப்பா, குண்டூர், அனந்தப்பூர், சித்தூர் ஆகிய ராயலசீமா பகுதிகளிலும், விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய கடலோர பகுதிகளிலும், கிருஷ்ணா, பிரகாசம், கோதாவரி ஆகிய ஆந்திரா பகுதிகளிலும் மிக அதிகளவில் உஷ்ண நிலை மாறி வருகிறது. இதன் காரணமாக முதியோர், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Previous Post Next Post