மே 18 நினைவேந்தல் ஒன்றிணைந்தே அனுஸ்ரிப்பு: -க.வி.விக்னேஸ்வரன்- - Yarl Thinakkural

மே 18 நினைவேந்தல் ஒன்றிணைந்தே அனுஸ்ரிப்பு: -க.வி.விக்னேஸ்வரன்-

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முரண்பாடுகளின்றி உணர்வு பூர்வமாக சகல மக்களும் ஒன்றிணைந்து அனுஸ்ரிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். 

குறித்த நிகழ்வினை நடத்துவது தொடர்பில் முரண்பட்டவர்கள் நினைவேந்தலின் தாற்பர்யத்தையும், உயிரிழந்தோருக்கு அஞ்சலியையும் உறவுகளை இழந்தோருக்கு தேறுதலையும், ஆறுதலையும் வழங்க ஒன்றாக கைகோர்த்துள்ளதாகவும் அவர் தனது அழைப்பின் ஊடாக அறிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் ஊடாகவே மேற்படி அழைப்பினை விடுத்துள்ளார். 

அவ்வழைப்பில் நிகழ்வு இடத்திற்கு அனைவரையும், காலை 10.15 மணிக்கு வருகைதருமாறும், 11 மணிக்கு பிரதான சுடரை உறவை பறிகொடுத்த வயது முதிர்ந்த தாய் ஒருவர் முதலமைச்சருடன் இணைந்து ஏற்றுவார்.

இதனைத் தொடர்ந்து ஏனையவர்கள் தீபங்களை ஏற்றும், மலர்களை தூவியும் உறவுகளை நினைவு கூறமுடிம். 

வடக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்கான பேக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேக்குவரத்து நேர அட்டவணை நாளை அறிவிக்ப்பதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Previous Post Next Post