தேவாலயங்கள் மீது ஐ.எஸ். தாக்குதல்: 11பேர் பலி - Yarl Thinakkural

தேவாலயங்கள் மீது ஐ.எஸ். தாக்குதல்: 11பேர் பலி


இந்தோனேஷியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 11பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது.
சில நிமிட இடைவெளியில் நடந்த இத்தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்கள் பெருமான்மையாக வாழும் இந்தோனேஷியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களை ஐ.எஸ். அமைப்பு நடத்தியுள்ளது.
Previous Post Next Post