தேர்தல் அலுவலகத்தில் தாக்குதல்:11பேர் பலி - Yarl Thinakkural

தேர்தல் அலுவலகத்தில் தாக்குதல்:11பேர் பலி

லிபியாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
லிபியாவில் ஜனாதிபதி முகமது கடாபி கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியாளர்களின் வன்முறை தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பின்னர் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடாபியின் ஆட்சியில் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அவரது மரணத்திற்கு பின்னர் 2012ஆம் ஆண்டில் தேர்தல் நடைமுறை உருவானது. அங்கு நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுயாட்சி தன்மையுடன் செயற்படக் கூடிய அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையமும் உள்ளது.
இந்நிலையில் லிபியாவிலுள்ள தேர்தல் ஆணையத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 11பேர் உடல் சிதறி பலியாகினர்.

Previous Post Next Post