104 வயது விஞ்ஞானி தற்கொலை - Yarl Thinakkural

104 வயது விஞ்ஞானி தற்கொலை


அவுஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் பேராசிரியராக பணியாற்றிய 104வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.
முதுமையடைந்த போதும் இவருக்கு எவ்வித நோய்களும் ஏற்படவில்லை. எனினும் இவரது உடல்நிலை மோசமானது. எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். தனது தற்கொலைக்கு உதவுமாறு அவுஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஒருவரின் தற்கொலைக்கு உதவுவது சட்டவிரோதம் என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. எனவே டேவிட்டின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
எனினும் சுவிட்ஸர்லாந்தில் தங்கள் வேலையை தாங்களே செய்யும் அளவுக்கு உடல் ரீதியாக திடகாத்திரமாக இருக்கும் ஒருவர், நீண்ட காலமாக தானாகவே இறக்கும் கோரிக்கை கொண்டிருந்தால்  அவரது தற்கொலைக்கு உதவுவது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே அவுஸ்திரேலிய அரசின் புறக்கணிப்பால் விரக்தியடைந்த டேவிட் குட்ஆல், சுவிட்ஸர்லாந்து சென்றார். அவரது அமைதியான மரணத்துக்கு உதவ முன்வந்த ‘எக்சிட் இன்டர்நேஷனல்’ நிறுவனம், அவரது பயணத்துக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தது.

அதன்படி சுவிட்ஸர்லாந்து சென்ற அவர் பசல் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை விஷ ஊசி செலுத்தி மரணம் விளைவிக்கப்பட்டது.
Previous Post Next Post