இந்துக்கள் 100பேர் படுகொலை - Yarl Thinakkural

இந்துக்கள் 100பேர் படுகொலை



மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்தாண்டு கலவரம் ஏற்பட்ட போது, ரோஹிங்கியா தீவிரவாதிகள் 100இந்துக்களை படுகொலை செய்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வந்தனர். இவர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அரகன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி என்ற தீவிரவாத அமைப்பு ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது.

இதில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சுமார் 7இலட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறி, வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கலவரம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தியது.

 மேலும் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதனடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2017 ஆகஸ்ட் 25ஆம் திகதி ராக்கைன் மாகாணத்தின் வடக்கு மவுங்டாவுக்குட்பட்ட கா மவுங் சீக் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது ஏ.ஆர.;எஸ்.ஏ. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக ஆண், பெண், குழந்தைகள் என மொத்தம் 69பேரை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி உள்ளனர்.

அவர்களைக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதே நாளில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 46இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Previous Post Next Post