மின்னல் தாக்கி 100வீடுகள் தீக்கிரை - Yarl Thinakkural

மின்னல் தாக்கி 100வீடுகள் தீக்கிரை

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை தாக்கிய புழுதிப் புயலை அடுத்து ஏற்பட்ட இடி, மின்னலால் 100இற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்புரா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியது. இதனால் 100இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Previous Post Next Post