பலியானவர்களின் குடும்பங்களுக்கு 10இலட்சமும், வேலைவாய்ப்பும் - Yarl Thinakkural

பலியானவர்களின் குடும்பங்களுக்கு 10இலட்சமும், வேலைவாய்ப்பும்


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. '
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் போராட்டம் நடத்தினர்.

அப்போது நடந்த கலவரத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 இலட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 இலட்சமும் நிவாரணம் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றவாறு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post