ஜிம் செல்லும் விக்ரம் - Yarl Thinakkural

ஜிம் செல்லும் விக்ரம்


கதைகளுக்கேற்ப தனது உடலை வருத்தி நடிக்கக் கூடியவர் விக்ரம்.
சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி விக்ரம் நடித்தார். அதன்பிறகு விக்ரமின் திறமைக்கு சவால் விடக்கூடிய சரியான கதைகள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது சாமி ஸ்கொயர் படத்தில்  நடித்து வரும் அவர், இதையடுத்து மகாவீ ரர் கர்ணா என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். ஒக்டோபரில் இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதனால் கர்ணன் என்ற சரித்திர கதாபாத்திற்கேற்ப உடல்கட்டை மாற்றும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வரும் விக்ரம், தினமும் ஜிம்மிற்கு சென்று கிட்டத்தட்ட 5மணி நேரத்திற்கும்  மேலாக பயிற்சி செய்து வருகிறார். இந்த படம் அவதார் பாணியில் அதிரடி சரித்திர படமாக உருவாகிறது.
Previous Post Next Post