ரயில் நிலையத்தில் காத்திருந்த மோடி? - Yarl Thinakkural

ரயில் நிலையத்தில் காத்திருந்த மோடி?


பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் காத்திருப்பது போன்ற புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இப்புகைப்படம் மோடியினுடையது அல்ல, மார்பிங் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது அப்புகைப்படம் பற்றிய தகவல்களும், அதில் பிரதமர் மோடியை போன்று இருப்பவரின் பெயர் எம்.பி.ராமச்சந்திரன். கன்னட படமான 'ஸ்டேட்மென்ட் 8/11' என்ற படத்தில் பிரதமர் மோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று காட்சிகளில் பிரதமர் மோடியாக தோன்றுகிறார் ராமச்சந்திரன். ராமந்திரனின் தோற்றம்  மோடியைப் போலவே உள்ளதென ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி மோடி அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு திட்டத்தை மையப்படுத்தியே இப்படத்தின் தலையங்கம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மே மாதம் வெளியாகவுள்ளது.

Previous Post Next Post