கருணாநிதியை சந்தித்த தெலுங்கானா முதல்வர் - Yarl Thinakkural

கருணாநிதியை சந்தித்த தெலுங்கானா முதல்வர்


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
தேசியளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கும் பணியில் தெலுங்கனா மாநில முதலமைச்சரும், தெலுங்கானா ரஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை சந்திரசேகர ராவ், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Previous Post Next Post