Monday, August 19, 2019

வைத்தியர் சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் கைது!!

வைத்தியர் சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும், பளை வைத்தியசாலையில் பொறுப்பதிகாயுமான மருத்துவ நிபுணர் சி.சிவரூபன் நேற்று இரவு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக  அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே அழைத்து செல்லப்பட்டதாக

வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களின் முன்னர் பளையில்  முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய விவகாரத்தில்,

ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் இடி மின்னலுடன் மழை!!

வடக்கில் இடி மின்னலுடன் மழை!!

நாட்டின் வடமாகாணம் உள்ளிட்ட வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்கலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகிறது.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினாலும் மின்னல் தாக்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் ஏற்படும்.

எனவே பொது மக்கள் இவ்வனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொக்குவில் உணவகம் மீது தாக்குதல்!!

கொக்குவில் உணவகம் மீது தாக்குதல்!!

யாழ்.கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர்  தாக்தல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயமடைந்ததுடன், அங்கிருந்த  பெருமதியான பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

காங்கேசன்துறை வீதி கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் நேற்று இரவு 9 மணியளவில் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை, கண்ணாடி அலுமாரிகளை அடித்து நொருக்கியுள்ளது.

மேலும் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீதும் அக் கும்பல் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் உணகவ உரிமையாளர் தலையில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்த உணவகத்திற்குச் சென்று தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Saturday, August 17, 2019

உயிருக்கு ஆபத்து!!  -மைத்திரியிடம் பாதுகாப்பு கோரும் கோட்டா-

உயிருக்கு ஆபத்து!! -மைத்திரியிடம் பாதுகாப்பு கோரும் கோட்டா-

ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு பாதுபாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளார்.

தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கிடைத்த பாதுகாப்பு குறித்தான தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ள கோட்டாபய , இது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கோட்டாவின் தகவல்களையடுத்து அது தொடர்பில் முழு விசாரணை நடத்த அரச புலனாய்வுத்துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்கு இராணுவ புலனாய்வுத்துறையும் ஒத்துழைக்க கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு செயலருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என சொல்லப்பட்டது.

Friday, August 16, 2019

குடியுரிமை சர்ச்சை!!  அவசரமாக அமெரிக்க பறக்கும் கோத்தா-

குடியுரிமை சர்ச்சை!! அவசரமாக அமெரிக்க பறக்கும் கோத்தா-

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டிவுள்ள கோத்தபாய ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக இரகசிய தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து நாடு முழுவதிலும் உள்ள சமய தலங்களிற்குற் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார்.

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகளை அடுத்து அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

இலங்கை - அமெரிக்க குடியுரிமையை கொண்ட கோத்தபாய, தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்ததாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

எனினும் அமெரிக்காவினால் நேற்று வெளியிட்ட பட்டியலில் கோத்தபாய தனது குடியுரிமையை நீக்கிக் கொள்ளப்பட்டதாக உள்ளடக்கப்படவில்லை. இந்நிலையிலேயே அவர் அவசர அவசரமான அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.